மணல் கடத்திய லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-06-22 18:08 GMT
கல்லல், ஜூன்.
சொக்கநாதபுரம் அருகே கீழக்கோட்டை மணிமுத்தாறு பகுதியில் மணல் திருட்டு நடப்பதாக கிராம நிர்வாக அலுவலர் பிரியா மதகுபட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து கீழக்கோட்டையை சேர்ந்த சதீஷ், அழகு பாண்டி, பழனி குமார் மீது மதகுபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் லாரியும், மணல் அள்ள பயன்படுத்திய எந்திரமும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்