வந்தவாசி அருகே ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல். 2 பேர் கைது

வந்தவாசி அருகே ரூ.3 லட்சம் குட்கா பறிமுதல்

Update: 2021-06-22 17:14 GMT
வந்தவாசி

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சோனியா தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது வந்தவாசியில் இருந்து தெள்ளாறு நோக்கி வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில், ரூ.3 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் வாகனத்தில் வந்தவர்களிடம் விசாரணை நடத்தியதில், வந்தவாசி காந்தி சாலையை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 32), வந்தவாசியை அடுத்த அம்மையப்பட்டு கிராமத்தை சேர்ந்த முகமதுஉசேன் (32) என்பதும், தெள்ளாரை சுற்றியுள்ள கடைகளுக்கு போடுவதற்காக குட்கா பொருட்கள் கொண்டு சென்றதும் தெரியவந்தது. 

இதனையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்