கோவை
கன்னியாகுமரி மாவட்டம் ஜோஸ்புரம் மயிலாடியை சேர்ந்தவர் ரூபின் (வயது 35). ஆண் செவிலியர். இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி பணியாற்றி வந்தார்.
இவருக்கும், சைனி என்பவருக்கும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. சைனியும் நர்சு ஆவார். அவர் சென்னையில் பணியாற்றி வருகிறார்.
இந்தநிலையில் ரூபினுக்கு வெளிநாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் கொரோனா ஊரடங்கு காரணமாக அந்த ஆசை நிறைவேற வில்லை என்று தெரிகிறது.
இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவர் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை என்றுகடிதம் எழுதி வைத்து இருந்தார்.
அதை கைப்பற்றி பீளமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.