காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் ஆய்வுக்கூட்டம்

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் காஞ்சீபுரம் மாவட்டத்தில் ‘உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-06-22 10:39 GMT
மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தலைமை வகித்து பேசினார். அப்போது அவர், நிலுவையில் உள்ள மனுக்களின் மீது உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொண்டு பயனாளிகளுக்கு விரைவில் நலத்திட்ட உதவிகளை வழங்குமாறு 
அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயசுதா, தனி துணை கலெக்டர் சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்