குமாரபாளையத்தில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்

குமாரபாளையத்தில் கன்டெய்னர் லாரி சக்கரத்தில் சிக்கி தொழிலாளர்கள் படுகாயம்.

Update: 2021-06-22 01:15 GMT
குமாரபாளையம்,

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் (வயது 30). தண்டராம்பேட்டையை சேர்ந்தவர்  பெரியசாமி (31). கட்டிட தொழிலாளர்களான 2 பேரும் நேற்று திருவண்ணாமலையில் இருந்து கோவைக்கு கட்டிட வேலைக்காக மோட்டார்சைக்கிளில் சேலம்- கோவை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தனர். 
அப்போது குமாரபாளையம் காவிரி பாலம் அருகே வந்தபோது மோட்டார்சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் சென்று கொண்டிருந்த கன்டெய்னர் லாரியில் பின் சக்கரத்தில் சிக்கியது. இதனால் மோட்டார்சைக்கிளில் இருந்து தவறி விழுந்த 2 பேரின் கால்களில் கன்டெய்னர் லாரி ஏறி இறங்கியது. இதில் ராமச்சந்திரன், பெரியசாமி ஆகியோரது கால்கள் சிதைந்தது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற குமாரபாளையம் போலீசார் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராடிய இருவரையும் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்