அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பாவூர்சத்திரத்தில் அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
பாவூர்சத்திரம்:
தென்காசி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாவூர்சத்திரத்தில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் எஸ்.செல்வ மோகன்தாஸ் பாண்டியன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சண்முகசுந்தரம் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள், மாவட்ட அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் அ.தி.மு.க.வின் வளர்ச்சிக்கு இடையூறாக சசிகலாவுடன், தொலைபேசியில் பேசும் நிர்வாகிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் நிர்வாகிகளை தேர்ந்தெடுத்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவிப்பது, நாடு முழுவதும் அவ்வப்போது ஏற்படும் தொடர் மின்வெட்டை கண்டித்தல், அ.தி.மு.க.வினர் மீது பொய் வழக்குப்போடும் காவல்துறையினரை கண்டித்தல் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் கீழப்பாவூர், கடையம், ஆலங்குளம் ஒன்றிய செயலாளர்கள், மகளிரணியினர், தகவல் தொழில்நுட்ப பிரிவினர் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.