பஸ்களை இயக்கக்கோரி போக்குவரத்து அதிகாரிக்கு எம்.எல்.ஏ. மனு

ஆலங்குளம் பகுதியில் பஸ்களை இயக்கக்கோரி போக்குவரத்து அதிகாரிக்கு மனோஜ்பாண்டியன் எம்.எல்.ஏ. மனு அனுப்பி உள்ளார்.

Update: 2021-06-21 20:35 GMT
ஆலங்குளம்:
ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அரசு பஸ்களை இயக்க வேண்டும் என்று நெல்லை மண்டல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனருக்கு ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

அதில், கொேரானா பரவல் காரணமாக தமிழகத்தில் பஸ்கள் இயங்காமல் இருந்தது. தற்போது கொேரானா பரவல் குறைந்ததையடுத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பஸ்களை இயக்க வேண்டும் என்றும், ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட கிராம பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய வழிவகை செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்