அரசு ஊழியர்கள் பணிக்கு சென்றுவர பஸ் இயக்க கோரிக்கை
அரசு ஊழியர்கள் பணிக்கு சென்றுவர பஸ் இயக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
மதுரை,ஜூன்
அரசு ஊழியர்கள் பணிக்கு சென்றுவர பஸ் இயக்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
தளர்வுகள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் கலெக்டரிடம் கொடுக்கப்பட்ட கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு அத்தியாவசிய துறைகளைச் சார்ந்த அரசு ஊழியர்கள் 100 சதவீதமும், மற்ற துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் 50 சதவீதமும் பணிபுரிய வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால் தற்போது அரசு மற்றும் தனியார் பஸ்கள் எதுவும் இயக்கப்பட வில்லை.
பெட்ரோல் விலை
எனவே அரசு ஊழியர்கள் நீண்ட தூரத்தில் இருந்து இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அலுவலகம் சென்று வர வேண்டிய நிலை உள்ளது. பெட்ரோல் - டீசல் விலை உயர்வால் மிகுந்த பண செலவுகளும், வாகனங்களில் வரும் போது விபத்துகளும் ஏற்படுகிறது.
எனவே, மதுரை மாவட்டத்தில் டி.கல்லுப்பட்டி, எம்.கல்லுப்பட்டி, உசிலம்பட்டி, கொட்டாம்பட்டி, கள்ளிக்குடி, சோழவந்தான், வாடிப்பட்டி போன்ற மாவட்ட எல்லைகளில் இருந்து மதுரைக்கும், மதுரையிலிருந்து இதுபோன்ற எல்லைப்புற ஊர்களுக்கும் 50 சதவீத பயணிகளுடன் சென்றுவர போதிய பஸ் வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.