இன்று மின்தடை
தளவாய்புரம் பகுதிகளில் பராமரிப்பு பணிகளுக்காக இன்று மின்தடை செய்யப்படுகிறது.
ராஜபாளையம்,
ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி, சேத்தூர், ஆலங்குளம், ஆர்.ரெட்டியபட்டி ஆகிய உப மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. ஆதலால் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை கொத்தங்குளம், மொட்ட மலை, கலங்கபேரி, வேட்டை பெருமாள் கோவில் பகுதி, ராஜீவ் காந்தி நகர், வெங்கடேஷ் நகர், தளவாய்புரம், அம்மையப்பபுரம், இளந்திரை கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், ஜீவா நகர், காமராஜ் நகர், அயன் கொல்லங்கொண்டான், சொக்கநாதன்புத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்வினியோகம் இருக்காது என செயற்பொறியாளர் மாலதி தெரிவித்தார்.