புகளூர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு காவிரியில் இருந்து தண்ணீர் திறப்பு

தினத்தந்தி செய்தி எதிரொலியாக புகளூர் வாய்க்கால் தூர்வாரப்பட்டு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Update: 2021-06-21 18:56 GMT
நொய்யல்
தினத்தந்தியில் செய்தி
மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு கடந்த 12-ந்தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதில், புகளூர் வாய்க்காலில் தூர்வாரும் பணி நடந்ததால் வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்படவில்லை. 
இதனால் உடனடியாக வாய்க்காலில் தூர்வாரும் பணியை தீவிரப்படுத்த வேண்டும் என கடந்த 18-ந்தேதி தினத்தந்தி நாளிதழில் படத்துடன் செய்தி  வெளியிட்டது. 
இதன் எதிரொலியாக உடனடியாக அதிகாரிகளின் மேற்பார்வையில் தூர்வாரும் பணி துரிதப்படுத்தப்பட்டு விரைந்து முடிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் காரணாம் பாளையம் காவிரி தடுப்பணையில் இருந்து புகளூர் வாய்க்காலில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதையடுத்து உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் அப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்