இன்று மின்சாரம் நிறுத்தம்

இளையான்குடி, காரைக்குடி பகுதிகளில் இன்று மின்வினியோகம் இருக்காது.

Update: 2021-06-21 18:48 GMT
இளையான்குடி,

இளையான்குடி துணை மின்நிலையத்தில் இன்று(செவ்வாய்க்கிழமை) கண்ணமங்கலம் (பீடர்) பகுதியில் பராமரிப்பு பணி நடைபெறுகிறது. எனவே சோதுகுடி, சானாரேந்தல், அண்ணா நகர், இண்டங்குளம், கருஞ்சுத்தி, அரியாண்டிபுரம், கரும்புக்கூட்டம், கண்டணி, சாத்தனூர், தோக்கனேந்தல், சேத்தூர், மாரந்தை, நெஞ்சத்தூர், வடக்கு கீரனூர், வல்லக்குளம், அரணையூர் ஆகிய கிராமங்களில் இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மானாமதுரை கோட்ட மின்செயற்பொறியாளர் செல்வம் தெரிவித்து உள்ளார்.
தமிழ்நாடு மின்சார வாரிய பகிர்மான கழகம் காரைக்குடி கோட்டத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையங்களின் வழியாக செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் கீழ்க்கண்ட பகுதிகளில் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேவகோட்டை பிரிவில்- நித்தியகல்யாணிபுரம், கிருஷ்ணராஜபுரம், காந்தி ரோடு, கண்ணாடியார் வீதி, பெரிய பள்ளிவாசல் பகுதிகள், ஒத்தக்கடை, முகமதியர் பட்டணம் பழைய சருகனி ரோடு, அருணாசல பொய்கை, அழகாபுரி, அருணகிரி பட்டணம், புதூர் அக்ரஹாரம், அகதிகள் முகாம், நடராஜபுரம், கண்டதேவி ரோடு ஆகிய பகுதிகள்.
 கல்லல் பிரிவில்-ஏழுமாபட்டி, கருகுடி, கூத்தலூர், பிளார், பட்டணம்பட்டி, வாரிவயல், பொய்யலூர், கீரணிப்பட்டி, ஆலங்குடி, மேல மாகாணம் ஆகிய பகுதிகளிலும், காரைக்குடி பிரிவில் -கழனிவாசல், பாரதிதாசன் நகர், அசோக் நகர், மன்னர் நகர், ஆறுமுக நகர், வாட்டர் டேங்க், திலகர் நகர், செக்காலை, நேருநகர், வைரவபுரம், சிக்ரி, சுப்பிரமணியபுரம் வடக்கு, செக்காலைக்கோட்டை, பர்மா காலனி, கற்பக விநாயகர் நகர், தந்தை பெரியார் நகர், பாரி நகர் ஆகிய பகுதிகளிலும் மின்வினியோகம் இருக்காது.
இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்