குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் யோகா தினம்

குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

Update: 2021-06-21 17:53 GMT
குன்னூர்,

குன்னூர் அருகே உள்ள எம்.ஆர்.சி. ராணுவ முகாமில் யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது.

ராணுவ முகாம்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள பேரக்ஸில் எம்.ஆர்.சி. என்று அழைக்கப்படும் மெட்ராஸ் ரெஜிமெண்டல் சென்டர் ராணுவ முகாம் அமைந்துள்ளது. இந்த முகாமில் ராணுவ வீரர்களுக்கு ஆயுத பயிற்சிகள் மட்டுமின்றி யோகா பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று அகில இந்திய அளவில் 7-வது யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி குன்னூர் அருகே எம்.ஆர்.சி. ராணுவ முகாம் உள்ள நாகேஸ் பேரக்ஸில் பயிற்சி பெறும் இளம் ராணுவ வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் உள்பட 750-க்கும் மேற்ப்பட்டவர்கள் சமுக இடைவெளியுடன் யோகா நிகழ்ச்சியில் பங்கு பெற்றனர். 

இந்த யோகா நிகழ்ச்சியில் பல்வேறு ஆசனம், யோகா கலைகள் மற்றும் சுவாச பயிற்சி ஆகியவற்றை மேற்கொண்டனர்.

மன அழுத்தம்

இதுகுறித்து யோகா பயிற்சியாளரும், எம்.ஆர்.சி. ராணுவ முகாம் துணை கமாண்டோவுமான குமாரதாஸ் கூறியதாவது:-

யோகா பயிற்சி மேற்கொண்டால் உடல் பருமன், கொழுப்பு மற்றும் மன அழுத்தம் போன்ற வாழ்நாள் நோய்களில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ளலாம். தற்போது கொரோனா பரவல் காரணமாக வீட்டிலில் இருந்தபடியே யோகா பயிற்சி மேற்கொள்ள வைப்பதே இந்த ஆண்டின் நோக்கமாக இருந்தது. 

இதன்படி வீட்டிலிருக்கும் குடும்பத்தினர், மற்றும் குழந்தைகள் யோகா பயிற்சி மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்