தூத்துக்குடியில் கார் கண்ணாடியை உடைத்த 3 பேர் கைது

தூத்துக்குடியில் கார் கண்ணாடியை உடைத்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-06-21 16:27 GMT
தூத்துக்குடி:
கேரளா மாநிலம் திருச்சூரை சேர்ந்தவர் ஜாமேஷ் (வயது 64). இவர் தூத்துக்குடி கந்தன்காலனியில் ஜெயச்சந்திரன் என்பவரின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் ஜெயச்சந்திரன், தபால்தந்தி காலனியை சேர்ந்த யோகேஷ் தாவீது சத்யா (21) என்பவரின் தாயை அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதில் ஆத்திரம் அடைந்த யோகேஷ் தாவீது சத்யா மற்றும் அவரது நண்பர்கள் பிரவீன் (23), போல்டன்புரத்தை சேர்ந்த சாம்டேவிட் (21), இம்மானுவேல் ஆகியோர், ஜாமேஷ் குடியிருக்கும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொலைமிரட்டல் விடுத்து உள்ளனர். வீட்டின் ஜன்னல் கண்ணாடி மற்றும் கார் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தி உள்ளனர்.
இது குறித்து ஜாமேஷ் அளித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து யோகேஷ் தாவீது சத்யா, பிரவீன், சாம்டேவிட் ஆகியோரை கைது செய்தனர். மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்