மதுரை, ஜூன்.
மதுரை மதிச்சியம் போலீசார் ரோந்து சென்றபோது வைகை வடகரை இடிந்த பழைய கட்டிட பகுதியில் ஒரு கும்பல் கஞ்சா விற்பதாக தகவல் வந்தது. அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கிருந்த கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர். விசாரணையில் அவர்கள், ஆழ்வார்புரத்தை சேர்ந்த சரவணக்குமார் (வயது 24), கண்ணன் (24), முகேஷ் (22), ஜெயபால் (42) என்பதும், அவர்கள் 4 பேர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 4 பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து 23 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.