ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல் அருகே பெட்ரோல் விற்பனை நிலையம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
திண்டுக்கல் :
இதில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் காய்கறி விலை உயர்வுக்கு காரணமான மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டனர்.
பின்னர் பெட்ரோல் கேனுக்கு மாலை அணிவித்தனர். இதற்கு ஒன்றிய தலைவர் ஜோன்சன் தலைமை தாங்கினார்.
இதில் மாவட்ட தலைவர் பாலாஜி, ஒன்றிய செயலாளர் நிருபன், மாணவர் சங்க மாவட்ட செயலாளர் முகேஷ், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் அரபு முகமது, ஜோதிபாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.