தொண்டி,
திருவாடானை தாலுகா பாசிபட்டினத்தில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் அப்பகுதியில் எஸ்.பி. பட்டினம் போலீசார் சோதனை நடத்தியதில் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பின்புறம் உள்ள காட்டுகருவை முட்பு தருக்குள் பணம் வைத்துசூதாடி கொண்டிருந்தவர்களை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். இதில் சிலர் தப்பி ஓடி விட்டனர். இதுதொடர்பாக போலீசார் அதே ஊரைச்சேர்ந்த புரோஸ்கான் (வயது30). ராவுத்தர் (33) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 700 ரொக்கப்பணத்தையும் பறிமுதல் செய்தனர்.