பள்ளிபாளையத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி கைது
பள்ளிபாளையத்தில் சிறுமியை கடத்தி திருமணம் செய்த தொழிலாளி கைது.
பள்ளிபாளையம்,
பள்ளிபாளையம் காவிரி கரை ஒன்பதாம்படி பகுதியை சேர்ந்தவர் கோபி (வயது 24). கட்டிட தொழிலாளி. இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். இந்தநிலையில் ேகாபி கட்டிட வேலைக்கு சென்றபோது ஓடப்பள்ளி பகுதியை சேர்ந்த 12 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்தி கொண்ட கோபி கடந்த 18-ந் தேதி சிறுமியிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று திருமணம் செய்ததாக தெரிகிறது. மேலும் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது. மகளை காணாததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தமூர்த்தி வழக்குப்பதிவு செய்து தொழிலாளி கோபி, சிறுமியை தேடி வந்தார். இந்தநிலையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கவுதம், ஏட்டு வேலுமணி மற்றும் போலீசார் நேற்று காலை காவிரி ஆர்.எஸ். பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்த சிறுமியை மீட்டதுடன், தொழிலாளி கோபியை பிடித்து பள்ளிபாளையம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு கோபியிடம் நடத்திய விசாரணையில் சிறுமியை கடத்தி திருமணம் செய்ததுடன் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து தொழிலாளி கோபியை போக்சோ சட்டத்தின் கீழ் ேபாலீசார் கைது செய்தனர்.