பாம்பு கடித்து மாணவன் சாவு

பாவூர்சத்திரம் அருகே பாம்பு கடித்து மாணவன் இறந்தான்.

Update: 2021-06-20 20:09 GMT
பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் அருகே செல்வநாயகபுரம் முல்லை தெருவை சேர்ந்தவர் செல்வகுமார் மகன் சக்திவேல் (வயது 14). சிவநாடானூரில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள புளியமரம் அருகில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது காலில் விஷப்பாம்பு கடித்துள்ளதாக தெரிகிறது. அதை பொருட்படுத்தாமல் இருந்துள்ளான். நேரம் ஆக ஆக அவனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது. 

உடனடியாக சக்திவேலை தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சக்திவேல் சிறிது நேரத்திலேயே இறந்தான். இதுகுறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் செய்திகள்