மது விற்ற 3 பேர் கைது
சிவகாசியில் மதுவிற்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபாகரன் உத்தரவின் பேரில் உட்கோட்டத்தில் உள்ள போலீசார் பல்வேறு இடங்களில் திடீர் சோதனை செய்தனர். இதில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக திருத்தங்கல் பாண்டியன்நகர் முத்துக்குமார் (வயது 38), விஜயலட்சுமி காலனி துரைக்கண்ணன் (38), திருத்தங்கல் பசும்பொன் நகர் மாரிமுத்து (32) ஆகியோரை சிவகாசி கிழக்கு போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து 12 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.