தவுட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகாரி ஆய்வு
தவுட்டுப்பாளையம் பகுதிகளில் அதிகாரி ஆய்வு செய்தார்.
நொய்யல்
கரூர் மாவட்டம் தவிட்டுப்பாளையம் பகுதிகளில் உள்ள வீடுகள் தோறும் சென்று அங்குள்ள தண்ணீர் தொட்டிகள், உடைந்த பிளாஸ்டிக் பாட்டில்கள், மேலும் உடைந்த கண்ணாடி ஜாடிகள் ஆகியவற்றில் உள்ள தண்ணீரில் கொசு புழுக்கள் உற்பத்தியாகி இருக்கின்றனவா? என மாவட்ட இளநிலை பூச்சியியல் வல்லுனர் மல்லிகா தலைமையிலான சுகாதாரத் துறையினர் ஆய்வு நடத்தினர். அதேபோல் தொட்டிகளில் நீண்ட நாட்களாக இருக்கும் தண்ணீரையும் ஆய்வு செய்தனர். பின்னர் தேங்கியிருக்கும் தண்ணீரை அகற்றி கொசு புழுக்களை அழிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.