கொரோனாவுக்கு 13 பேர் பலி;புதிதாக 263 பேருக்கு தொற்று

திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். புதிதாக 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2021-06-20 18:27 GMT
திருச்சி,
திருச்சி மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று ஒரே நாளில் புதிதாக 263 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனை மற்றும் முகாம்களில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் 916 பேர் பாதிப்பில் இருந்து குணமடைந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர். திருச்சி மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 13 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 846 ஆக உயர்ந்துள்ளது. தற்போது தொற்று பாதிப்புடன் 2,286 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். திருச்சி மாவட்டத்தில் இதுவரை மொத்த கொரோனா பாதிப்பு 67 ஆயிரத்து 139 ஆக உள்ளது.

மேலும் செய்திகள்