மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

மகளிர் சுயஉதவிக்குழுவினருக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி

Update: 2021-06-20 18:26 GMT
சுல்தான்பேட்டை

சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் உள்ள 20 ஊராட்சிகளில் 499 மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயங்கி வருகின்றன. 

மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகம் சார்பில் செலக்கரிசல், பாப்பம்பட்டி, கள்ளப்பாளையம் பகுதியில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவை சேர்ந்த பெண்களுக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. 

இதில் மண்டல உதவி திட்ட அதிகாரி முத்து தலைமை தாங்கி, கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

அப்போது அவர் பேசும்போது, பொதுமக்கள் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது, அடிக்கடி கைகளை சோப்புப்போட்டு கழுவ வேண்டும், வெளியே சென்றால் முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது என்றார். 

அதுபோன்று ஆனைமலை ஒன்றியத்தில் உள்ள திவான்சாபுதூர் ஊராட்சியில் உள்ள குழுக்களுக்கு ஊரக வாழ்வாதார இயக்க மண்டல உதவி திட்ட அதிகாரி தெய்வம் கலந்து கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

இதில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்