திருப்பூரில் சேலையில் தூரி கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கப்பட்டதால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பூரில் சேலையில் தூரி கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கப்பட்டதால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
வீரபாண்டி:
திருப்பூரில் சேலையில் தூரி கட்டி விளையாடிய சிறுவன் கழுத்து இறுக்கப்பட்டதால் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுபற்றி போலீ்ஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
5-ம் வகுப்பு மாணவன்
சேலம் மாவட்டம் அரூரை சேர்ந்தவர் வெங்கடேஷ்வரன் (வயது36). இவர் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி செண்பகவல்லி (28) மகன்கள் மித்ரன் (10), பிரசன்னா (6) ஆகியோருடன் திருப்பூர் பழவஞ்சிபாளையம் சிவசக்தி நகரில் வசித்து வருகிறார். மித்ரன் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான்.
இந்தநிலையில் கடந்த சில மாதங்களாக சிவசக்தி நகர் பகுதியில் வசிக்கும் பள்ளி சிறுவர்கள் ஒன்று சேர்ந்து வீட்டு அருகில் உள்ள மரத்தில் சேலையில் தூரி (ஊஞ்சல்) கட்டி விளையாடி வந்ததாக கூறப்படுகிறது.
கழுத்தை இறுக்கி பலி
மித்ரனும் அங்கு அடிக்கடி சென்று விளையாடி வந்துள்ளான். வழக்கம் போல நேற்று மித்ரன் ஊஞ்சலை சுற்றி, சுற்றி விளையாடியதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வேகமாக சுற்றியதில் சிறுவன் சிறிதும் எதிர்பாக்காமல் சேலை கழுத்தை இறுக்கியுள்ளது. இதனால் சத்தம்போட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டதால் வீட்டில் இருந்தவர்கள் வெளியில் வந்து பார்க்கவில்லை.
நீண்ட நேரம் ஆகியும் மித்ரனின் சத்தம் இல்லை என வெளியே வந்து பார்த்த போது சிறுவன் கழுத்தில் சேலை சுற்றி மயக்க நிலையில் தொங்கிக்கொண்டு இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மித்ரனை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மித்ரனை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.
பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த வீரபாண்டி போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
---