ஊட்டியில் முககவசம் அணியாததால் 3 வியாபாரிகளுக்கு அபராதம்

ஊட்டியில் முககவசம் அணியாததால் 3 வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-06-20 16:43 GMT
ஊட்டி,

நீலகிரி மாவட்டத்தில் முழு ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கிறது. ஊட்டியில் நடை பாதைகளில் காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். 

இந்த நிலையில் நேற்று நகராட்சி சுகாதார அதிகாரிகள் நடைபாதை கடைகளில் சமூக இடைவெளி போன்ற அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்தனர். அப்போது முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த 3 பேருக்கு தலா ரூ.200 என மொத்தம் ரூ.600 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது. 

மேலும் கொரோனா பரவலை தடுக்க அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது.

மேலும் செய்திகள்