திருப்பூரில் பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து
திருப்பூரில் பூட்டியிருந்த வீட்டில் தீ விபத்து
திருப்பூர்
திருப்பூர் பார்க் ரோட்டில் பூங்காவுக்கு எதிரே உள்ள பழைய ஓட்டு கட்டிடத்தில் நேற்று காலை 9.30 மணி அளவில் கரும்புகை வெளியேறியது. அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் இதை கவனித்து திருப்பூர் வடக்கு தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். நிலைய அதிகாரி பாஸ்கரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர். அந்த வீட்டின் உரிமையாளர் வெளியூரில் வசித்து வருவதாகவும், ஆண்டுக்கணக்கில் அந்த வீடு பூட்டியே கிடப்பதாகவும் அருகில் உள்ளவர்கள் தெரிவித்தனர். வீட்டிலிருந்த பழைய மர சாமான்கள், பழைய இருசக்கர வாகனம், பழைய பொருட்கள் எரிந்து நாசமானதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருப்பூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.