தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் கலெக்டர் செந்தில்ராஜ் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்களை கலெக்டர் செந்தில்ராஜ் அறிவித்து உள்ளார்.

Update: 2021-06-20 15:31 GMT
தூத்துக்குடி:-
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (திங்கட்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. 
இது குறித்து மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
தடுப்பூசி முகாம்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் கபசுர குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும் இருவேளை கிருமிநாசினி மூலம் தெளிப்பு தூய்மை பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் மாவட்டத்தின் ஊரக பகுதிகளில இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கொரோனா தடுப்பூசி முகாம் மற்றும் காய்ச்சல் பரிசோதனை நடத்தப்படுகிறது.
அதன்படி தூத்துக்குடி மாநகராட்சியில் தூத்துக்குடி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் 800 பேருக்கும், தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் 200 பேருக்கும், இஞ்ஞாசியர்புரம் புனித தாமஸ் பள்ளியில் 200 பேருக்கும், பாத்திமா நகர் நகர்ப்புற சுகாதார நிலையத்தில் 150 பேருக்கும், பாளையங்கோட்டை ரோடு புனித மரியன்னை ஆண்கள் பள்ளியில் 200 பேருக்கும், கணேஷ்நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 150 பேருக்கும், திரேஸ்புரம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 150 பேருக்கும், தருவை ரோடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 150 பேருக்கும், மடத்தூர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 100 பேருக்கும், முள்ளக்காடு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் 150 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படுகிறது.
புதுக்கோட்டை
தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் பி.எஸ்.பி. மேல் நிலைப்பள்ளி புதுக்கோட்டை, பஞ்சாயத்து அலுவலகம் அய்யனடைப்பு பகுதியில் 400 நபர்களுக்கும், சோனா கல்யாண மண்டபம், தாளமுத்துநகர். சோனா கல்யாண மண்டபம்,
சமீர்வியார்ஸ் நகர் பகுதியில் 400 நபர்களுக்கும், பேரூரணி கல்யாண மண்டபத்தில் 200 நபர்களுக்கும், விட்டிலாபுரம் அங்கன்வாடி மையம், முத்தாலங்குறிச்சி அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், கருங்குளம் பஞ்சாயத்து அலுவலகம், தாதன்குளம் அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், கொங்கராயக்குறிச்சி அங்கன்வாடி, ஆறாம்பண்ணை அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், மீனாட்சிபட்டி இன்டர்ஸ்னாக்ஸ் முந்திரி தனியார் லிமிடெட் நிறுவனத்தில் 200 நபர்களுக்கும், கோவங்காடு மினி கிளினிக்கில் 150 நபர்களுக்கும், வேப்பங்காடு அங்கன்வாடி மையத்தில் 50 நபர்களுக்கும், நங்கைமொழி அங்கன்வாடி மையத்தில் 50 நபர்களுக்கும், சிவலூர் தொடக்கப்பள்ளியில் 50 நபர்களுக்கும், கொட்டங்காடு தொடக்கப்பள்ளியில் 50 நபர்களுக்கும், ரங்கநாதபுரம் அம்மன் கோவிலில் 50 நபர்களுக்கும், காயாமொழியில் 100 நபர்களுக்கும், திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் 100 நபர்களுக்கும், காயல்பட்டிணம் அரசு மருத்துவமனையில் 100 நபர்களுக்கும், நாசரேத் லூக்ஸ் சமுதாயக் கல்லூரியில் 250 நபர்களுக்கும், சாத்தான்குளம் புனித ஸ்டீபன் தொடக்கப்பள்ளியில் 100 நபர்களுக்கும், பெரியதாழை ஆர்.சி. தொடக்கப்பள்ளியில் 200 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
கோவில்பட்டி
இதேபோன்று கோவில்பட்டி நகராட்சி அலுவலகம், பூங்கா ரோட்டில் 700 நபர்களுக்கும், பசுவந்தனை ரோடு நாடார் உயர்நிலைப்பள்ளியில் 700 நபர்களுக்கும், எட்டயபுரம் செங்குந்தர் பள்ளியில் 620 நபர்களுக்கும், கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் 260 நபர்களுக்கம், கொம்பாடி தொடக்கபள்ளியில் 200 நபர்களுக்கும், கொம்பாடி தளவாய்புரம் நடுநிலைப் பள்ளியில் 200 நபர்களுக்கும், குமரெட்டியாபுரம் அங்கன்வாடி மையத்தில் 200 நபர்களுக்கும், மீனாட்சிபுரம் அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், தருவைகுளம் மேல்நிலைப் பள்ளியில் 100 நபர்களுக்கும், சமத்துவபுரம் அங்கன்வாடி மையத்தில் 200 நபர்களுக்கும், கீழக்கரந்தை பஞ்சாயத்து அலுவலகத்தில் 50 நபர்களுக்கும், தென்னம்பட்டி பஞ்சாயத்து தொடக்கப்பள்ளியில் 60 நபர்களுக்கும், கே.சுப்பையாபுரம் பஞ்சாயத்து தொடக்கபள்ளியில் 50 நபர்களுக்கும், பொம்மையாபுரம் அங்கன்வாடி மையத்தில் 200 நபர்களுக்கும், குமரெட்டியபுரம் தொடக்கபள்ளியில் 100 நபர்களுக்கும், தெற்கு சுப்பிரமணியபுரம் அங்கன்வாடி மையத்தில் 100 நபர்களுக்கும், காலாம்பட்டி அரசு உயர்நிலைபள்ளியில் 200 நபர்களுக்கும், கழுகுமலை கோமதி தீப்பெட்டி தொழிற்சாலையில் 200 நபர்களுக்கும், தங்கம்மாள்புரம் சமுதாய நலக்கூடத்தில் 200 நபர்களுக்கும், சூரங்குடி சமுதாய நலக்கூடத்தில் 200 நபர்களுக்கும், பிள்ளையார்நத்தம் சமுதாய நலக்கூடத்தில் 200 நபர்களுக்கும், விளாத்திகுளம் கலைஞர் கிளினிக்கில் 160 நபர்களுக்கும் தடுப்பூசி போடப்படுகிறது.
எனவே பொதுமக்கள் அனைவரும் மேற்கண்ட முகாம்களில் தவறாது கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் செய்திகள்