விளாத்திகுளம் அருகே போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது

விளாத்திகுளம் அருகே மாணவிக்கு பாலியல் ரீதியாக மிரட்டல் விடுத்த தொழிலாளியை போலீசார போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

Update: 2021-06-20 15:19 GMT
விளாத்திகுளம்:
விளாத்திகுளம் அருகே உள்ள சூரங்குடி துவரந்தை பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் பாலமுருகன் (வயது 25). கூலித்தொழிலாளியான இவர், தூத்துக்குடி பள்ளியில் பிளஸ் 2 படிக்கும் விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 16 வயது மாணவியிடம் சகோதரர் போல பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியிடம் காதலிப்பதாக தெரிவித்ததால், பாலமுருகனிடம் பேசுவதை மாணவி நிறுத்திவிட்டார். இதில் ஆத்திரமடைந்த பாலமுருகன், அந்த மாணவியிடம் எனது செல்போனில் உனது வீடியோ படம் உள்ளது. அதை வெளியிடுவேன் என பாலியல் ரீதியாக மிரட்டியுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் விசாணை நடத்தி, போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பாலமுருகனை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்