22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுழற்சி முறையில் சீர்காழி பகுதியில் மின் தடை - செயற்பொறியாளர் தகவல்
சீர்காழி பகுதியில் 22-ந் தேதி முதல் 25-ந் தேதி வரை சுழற்சி முறையில் மின் தடை செய்யப்படும் என்று செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்துள்ளார்.
சீர்காழி,
சீர்காழி அருகே திருவெண்காடு, வைத்தீஸ்வரன்கோவில், எடமணல் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால், மேற்கண்ட துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் மணிகிராமம், மேலையூர், திருப்புங்கூர், திருக்கருக்காவூர், ஆகிய கிராமங்களுக்கு வருகிற 22-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இதேபோல ஆச்சாள்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் மாதானம், உமையாள்பதி, பச்சபெருமாநல்லூர் மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு வருகிற 23-ந் தேதி (புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
வைத்தீஸ்வரன்கோவில், திருவெண்காடு, அரசூர், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் தென்பாதி, கீழ தென்பாதி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், சட்டநாதபுரம், புங்கனூர், மேலையூர், காத்திருப்பு, திருமுல்லைவாசல், அகனி, ஆனைக்காரன் சத்திரம், தாண்டவன்குளம், துளசேந்திரபுரம், மற்றும் அதனை சார்ந்த பகுதிகளுக்கு 24-ந் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது.
இதேபோல் வைத்தீஸ்வரன்கோவில், அரசூர், ஆச்சாள்புரம் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின் வினியோகம் பெறும் சீர்காழி ரெயிலடி, கொள்ளிடம் முக்கூட்டு, விளந்திட சமுத்திரம், புளிச்சகாடு, மாதிரி வேலூர், பழையார், புதுப்பட்டினம், துளசேந்திரபுரம், மகேந்திரபள்ளி, காட்டூர் மற்றும் அதன் சார்ந்த பகுதிகளுக்கு வருகிற 25-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது.
இந்த தகவலை செயற்பொறியாளர் சதீஷ்குமார் தெரிவித்தார்.