திருவள்ளூர் கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி ஆய்வு

திருவள்ளூரில் உள்ள மாவட்ட ஒருங்கிணைந்த கோர்ட்டில் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2021-06-20 05:06 GMT
தலைமை நீதிபதி ஆய்வு
திருவள்ளூரில் உள்ள ஒருங்கிணைந்த மாவட்ட கோர்ட்டில் நேற்று சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி வருகை தந்து ஆய்வு மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து அவர் கோர்ட்டில் ஒவ்வொரு அறைக்கும் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.பின்னர் அவர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவையும் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து அவர் மாவட்ட நீதிபதி, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், அனைத்து நீதிபதிகள், அரசு வக்கீல்கள் மற்றும் வக்கீல்கள் சங்கப் பிரதிநிதிகளுடன் ஆகியோருடன் கலந்து ஆய்வு மேற்கொண்டார்.அப்போது தலைமை நீதிபதியிடம் கோர்ட்டு வளாகத்திற்குள் லிப்ட் வசதி, வங்கி, தபால் நிலையம், கழிவறை போன்ற வசதிகளை செய்து தர வேண்டும் என வக்கீல்கள் சங்க நிர்வாகிகள் வலியுறுத்தினர்.

கலெக்டர் வரவேற்பு
அவர் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக தெரிவித்தார். பின்னர் சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி கோர்ட்டு வளாகம் முன்பு மரக்கன்றுகளை நட்டு வைத்தார். இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்ட நீதிபதி செல்வ சுந்தரி, வக்கீல்கள் சங்க தலைவர்கள் சீனிவாசன், கணேசன், இளவரசு, நளினி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாக விருந்தினர் மாளிகையில் வருகைபுரிந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜியை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

மேலும் செய்திகள்