காஞ்சீபுரத்தில் ராகுல் காந்தி பிறந்த நாள் விழா
காஞ்சீபுரம் பெரியார் தூண் அருகே அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு காஞ்சீபுரம் மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் அளவூர் வி.நாகராஜன் தலைமை தாங்கினார். வி.ஆர்.வி. சூப்பர் மார்க்கெட் சார்பில் ஏழை எளிய மக்கள் 1,000 பேருக்கு 10 கிலோ அரிசி, காய்கறிகளை மாவட்ட தலைவர் அளவூர்
வி.நாகராஜன் வழங்கினார். இதில் வி.ஆர்.வி. சூப்பர் மார்க்கெட் உரிமையாளர் விழியரசு, நகர பொறுப்பாளர் நாதன், நிர்வாகிகள் பரந்தூர் சங்கர், மணிகண்டன், யோகி உள்பட பலர் கலந்துகொண்டனர்.