பரமத்திவேலூரில் வாரத்தில் 3 நாட்கள் வாழைத்தார் ஏல சந்தை நடத்த முடிவு

பரமத்திவேலூரில் வாரத்தில் 3 நாட்கள் வாழைத்தார் ஏல சந்தை நடத்த முடிவு

Update: 2021-06-19 23:08 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று வாழைத்தார் ஏல சந்தையை நடத்துவது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. திருச்செங்கோடு உதவி கலெக்டர் இளவரசி தலைமை தாங்கினார். பரமத்திவேலூர் தாசில்தார் ‌சுந்தரவள்ளி, பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாரணவீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில்‌ ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமை ஆகிய 3 நாட்களில் காலை 7 மணி முதல் 9 மணி வரை சமூக இடைவெளியை பின்பற்றியும், முககவசம் அணிந்தும் அரசு வழிகாட்டுதலின்படி வாழைத்தார் ஏல சந்தையை நடத்த அனுமதிப்பது. வாழைத்தார் ஏல சந்தையில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் முகவர்களுக்கு வேளாண்மை விற்பனை துறையினர் மூலம் தினந்தோறும் 70 நபர்களுக்கு மிகாமல் கலந்து கொள்ளும் பொருட்டு அடையாள அட்டை வழங்குவது. வேலூர் பேரூராட்சி நிர்வாகம் மூலம் வாழைத்தார் ஏல சந்தையில் கலந்து கொள்ளும் விவசாயிகள் மற்றும் விவசாயிகளின் முகவர்களுக்கு பெயர், முகவரி, செல்போன் எண்களுடன் கூடிய பதிவேடுகளை பராமரிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடித்து வேலூர் பேரூராட்சி ‌நிர்வாகம்‌ மூலம் வாழைத்தார் ஏல சந்தையை நடத்த அறிவுறுத்தப்பட்டது.‌ இதில் வேலூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன், நாமக்கல் ‌விற்பனை குழுவினர், பரமத்தி தோட்டக்கலை துறையினர், ராஜாவாய்க்கால் பாசன விவசாய சங்கம் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
=======

மேலும் செய்திகள்