ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், தா.பழூர், மீன்சுருட்டி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.

Update: 2021-06-19 19:57 GMT
ஆண்டிமடம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் சாமிதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது-
ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், பாப்பாக்குடி, தா.பழூர், ஓலையூர், நடுவலூர், உடையார்பாளையம், அய்யூர், தழுதாழை மேடு ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட மின் வினியோகம் பெறும் பகுதிகளான வரதராஜன்பேட்டை, தென்னூர், கீழ்நெடுவாய், குப்பம், குடிகாடு, பெரியாத்துக்குறிச்சி, ஓலையூர், விழுதுடையான், குளத்தூர், காட்டாத்தூர், எரவாங்குடி, அய்யப்பநாயக்கன்பேட்டை, திருக்களப்பூர், வங்குடி, சிலால், பிலிச்சுகுழி, தேவாமங்கலம், துளாரங்குறிச்சி, கச்சிபெருமாள், கோரைக்குழி, கொலையனூர், சுந்தரேசபுரம், இடைக்கட்டு, வடக்கு-தெற்கு ஆயுதகளம், உட்கோட்டை மற்றும் துணை மின் நிலையங்களின் அருகில் உள்ள கிராம பகுதிகளில் அத்தியாவசிய, அவசர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால், நாளை (திங்கட்கிழமை) மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதில் மின் நிறுத்தம் செய்யப்பட்ட நேரத்தில் இருந்து 3 மணி நேரம் மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்