வீட்டின் காம்பவுண்டு சுவரை சேதப்படுத்திய 8 பேர் கைது
கடையம் அருகே வீட்டின் காம்பவுண்டு சுவரை சேதப்படுத்திய 8 பேர் கைது செய்யப்பட்டார்.
கடையம்:
கடையம் அருகே புலவனூரில் சி.எஸ்.ஐ. தேவாலய தெருவை சேர்ந்தவர் செல்லத்துரை. சம்பவத்தன்று இடப்பிரச்சினையில் இவரது வீட்டின் காம்பவுண்டு சுவர் மற்றும் ஆட்டோவை மர்மநபர்கள் சேதப்படுத்தி உள்ளனர். மேலும் வீட்டின் கதவு கண்ணாடியை உடைத்து இருக்கின்றனர்.
சம்பவ இடத்தை தென்காசி தாசில்தார் சுப்பையன், ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன், கடையம் இன்ஸ்பெக்டர் ரகுராஜன் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக செல்லத்துரை கொடுத்த புகாரின் பேரில் அதே பகுதியை சேர்ந்த ராஜ், தேவகிறிஸ்டியன், அப்பாத்துரை, பால்ராஜ் உள்பட 8 பேர் மீது கடையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.