தொழிலாளிக்கு கத்திக்குத்து

மேலூர் அருகே ெதாழிலாளிக்கு கத்திக்குத்து விழுந்தது.

Update: 2021-06-19 19:19 GMT
மேலூர்,

மேலூர் அருகே மேலவளவு போலீஸ் சரகத்தில் உள்ள சாம்பிராணிபட்டியை சேர்ந்தவர் திருமலை (வயது 41). கூலி தொழிலாளி. இவர் ஊருக்கு வெளியே தனியாக இருந்தபோது 3 மர்ம ஆசாமிகள் கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றனர். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்