கார்மோதி கணவன் கண்முன்னே மனைவி பலி
கந்தர்வகோட்டை அருகே மோட்டார் சைக்கிள் மீது கார்மோதிய விபத்தில் கணவன் கண்முன்னே மனைவி உயிரிழந்தார்.
கந்தர்வகோட்டை,
புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா விசலூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார் (வயது 35). இவரும், இவரது மனைவி ரம்யா என்ற பாரதி (30) என்பவரும் மோட்டார் சைக்கிளில் செங்கிப்பட்டியில் இருந்து கந்தர்வகோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.

தெற்குப்பட்டி பிரிவு சாலையில் வந்தபோது, அந்த வழியாக வந்த கார் அவர்கள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ரம்யா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயம் அடைந்த குமார் கந்தர்வகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு முதலுதவி சிகிச்சைக்கு பின் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
இது குறித்து கந்தர்வகோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கந்தர்வகோட்டை காமராஜ் நகரை சேர்ந்த மாரிமுத்து (41) என்பவரை கைது செய்தனர்.