தர்மபுரியில் ஊரடங்கு விதிகளை மீறிய 65 பேர் மீது வழக்கு

தர்மபுரியில் ஊரடங்கு விதிகளை மீறிய 65 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-06-19 17:03 GMT
தர்மபுரி:
தர்மபுரி மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க பல்வேறு தளர்வுகளுடன்  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது .இதன் ஒரு பகுதியாக நேற்று மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் போலீசார் தீவிர வாகன சோதனை மற்றும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டனர். அப்போது முக கவசங்கள் அணியாமல் பொது இடங்களில் சென்ற 60 பேருக்கு தலா ரூ.200 வீதம் ரூ.12 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல் பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட 5 பேருக்கு ரூ.2 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டது. மாவட்டத்தில் ஊரடங்கு விதிமீறல் தொடர்பாக 65 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்