சென்னியூர் கிராமத்தில் ஒரே தெருவில் 6 பேருக்கு கொரோனா
சென்னியூர் கிராமத்தில் ஒரே தெருவில் 6 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கிணத்துக்கடவு, கோவில்பாளையம், வடசித்தூர் ஆகிய பகுதிகளில் சுகாதாரத்துறையினர் கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சூலக்கல் ஊராட்சிக்கு உட்பட்ட சென்னியூர் கிராமத்தில் ஒரே வீதியில் 6 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த பகுதியை சுகாதாரத்துறை, வருவாய்த்துறையினர் தனிமைப்படுத்தி, தடுப்பு வைத்து அடைத்தனர்.
மேலும் அந்த பகுதியில் இருந்து யாரும் வெளியே வரக்கூடாது என்றும், வௌியாட்கள் உள்ளே செல்லக்கூடாது என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் அந்த பகுதியில் தீவிர காண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டாக்டர் திலீப் குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் சென்னியூர் கிராமத்தில் 75 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். மேலும் சூலக்கல் ஊராட்சி சார்பில் சென்னியூரில் கிருமி நாசினி தெளித்தல் உள்ளிட்ட தடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.