கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி பகுதிகளில் 195 பேருக்கு கொரோனா பரிசோதனை
கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி பகுதிகளில் 195 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
சுல்தான்பேட்டை,
சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன்படி கிராமம், கிராமமாக சென்று அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் கள்ளப்பாளையம், பாப்பம்பட்டி, அப்பநாயக்கன்பட்டி ஆகிய 3 பகுதிகளில் கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் சந்திராபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் நடமாடும் மருத்துவ குழுவினர் டாக்டர் பவித்ரா தலைமையில், பொதுமக்களிடம் இருந்து மாதிரிகளை சேகரித்தனர்.
இந்த முகாம்களில் மொத்தம் 195 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.