கொரோனாவுக்கு மூதாட்டி பலி

கொரோனாவுக்கு மூதாட்டி பலியானார்.

Update: 2021-06-19 16:46 GMT

தேனி:
தேனி மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 123 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மாவட்டத்தில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 41 ஆயிரத்து 609 ஆக உயர்ந்தது. பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 223 பேர் நேற்று குணமாகினர். கொரோனா பாதிப்புடன் தற்போது 1,302 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் கொரோனா பாதிப்புடன் தேனியை சேர்ந்த 66 வயது மூதாட்டி மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதனால், இந்த வைரசுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 473 ஆக உயர்ந்தது.


மேலும் செய்திகள்