குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் கழிவுநீர்நடவடிக்கை எடுக்கக்கோரி பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு

Update: 2021-06-19 15:55 GMT
உடுமலை
உடுமலை அருகே உள்ள கணக்கம்பாளையம் ஊராட்சிக்குட்பட்டது சாரதாமணி லே-அவுட் குடியிருப்பு பகுதி. இந்த பகுதியில் ஒருபிரமுகர் வாடகைக்கு விட்டுள்ள வீடுகளில் இருந்து கழிவுநீர் வெளியேறி குளம் போல்தேங்கி, வீதியிலும் வழிந்தோடுகிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. கழிவுநீர் தேங்கி நிற்பதாலும், வீதியில் கழிவுநீர் செல்வதாலும் அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
இதுகுறித்து அந்த பிரமுகரிடம், ஊராட்சி நிர்வாகம் மற்றும்அந்த பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவித்தும், இந்த பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை. இந்த நிலையில் அங்கு தேங்கி நிற்கும் கழிவுநீரை அகற்றி, பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் என்று வலியுறுத்தி அந்த சுற்றுப்பகுதியைச்சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் அங்கு திரண்டனர். அதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் உடுமலை ஊராட்சி ஒன்றிய துணை வட்டாரவளர்ச்சி அலுவலர் நாச்சிமுத்து அங்கு விரைந்து வந்து பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்றார். இதைத்தொடர்ந்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்