மின்சாரம் நிறுத்தம் அறிவிப்பு
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
தொண்டி,
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் பகுதிகளில் மின்சார நிறுத்தம் அறிவிக்கப்பட்டு உள்ளது.
பராமரிப்பு பணி
திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட திருவாடானை, நாகரிகாத்தான், தொண்டி, ஆனந்தூர், உப்பூர், ஆர்.எஸ். மங்கலம் ஆகிய துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதியில் செல்லும் உயர் அழுத்த மின் பாதை களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. இதனால் கீழ்க்கண்ட நாட்களில் முக்கிய நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இதனால் இந்த பகுதியில் மின் வினியோகம் தடை செய்யப்படும் என உதவி செயற்பொறியாளர் ஜோசப் செல்வராஜ் தெரிவித் துள்ளார்.அதன் விவரம் வருமாற:- 21-ந்த தேதி நம்புதாளை, புதுபட்டினம், திருவெற்றியூர், காரங்காடு, முள்ளிமுனை, மணக்குடி, சேந்தனேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளது.
ஆனந்தூர்
இதேபோல் 22-ந் தேதி ஆனந்தூர், பணிக்கோட்டை, ராதானூர், கருங்குடி, கோவிந்தமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ளபகுதிகளிலும் 23-ம் தேதி புளியால், கரும்மொழி, அதங்குடி, நெய்வயல் முப்பையூர், அரசூர், டி.நாகனி, திருவேகம்பத்தூர், ஓரிக்கோட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளிலும் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும்.
24-ம் தேதி பெருமானேந்தல், பழையனக்கோட்டை, தளிர் மருங்கூர், தினையத்தூர், தேளூர், அச்சங்குடி, குளத்தூர், ஆதியூர், அழியாதான்மொழி, பகவதிமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் 25-ந் தேதி பாண்டுகுடி, அஞ்சு கோட்டை, நகரிகாத்தான், கூகுடி, மணலூர், பெருவாக் கோட்டை, ஆண்டாவூரணிபகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது.
உப்பூர்
28-ந் தேதி ஜனவெளி, கற்காத்தக்குடி, ஏ.ஆர்.மங்கலம், சவேரியார்பட்டினம், ஆப்பிராய் 29-ந் தேதி எம்.ஆர். பட்டினம், கொடிப்பங்கு, பாசிப்பட்டினம், கலியநகரி, எஸ்.பி பட்டினம் 30-ந் தேதி உப்பூர், சித்தூர்வாடி, கலங்காப்புளி, கடலூர், அழிந்திகோட்டை பாரனூர், ஆவரேந்தல் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் மின் வினியோகம் தடை செய்யப்படும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.