லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது
லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவஞான பாண்டி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுட்டிருந்தனர். அப்போது காதர்பள்ளிவாசல் தெரு பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நின்று கொண்டிருந்தவரை பிடித்து சோதனையிட்டனர். அவர் தடைசெய்யப்பட்ட லாட்டரி டிக்கெட்டுகள் வைத்திருந்தது தெரிந்தது. இதனை தொடர்ந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் லாட்டரி விற்று வைத்திருந்த ரூ.1,840-ஐ பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமநாதபுரம் வடக்குத்தெரு விசுவநாதன் மகன் அங்குராஜா (52) என்பவரை கைது செய்தனர்.