சிப்காட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 204 பேர் மீது வழக்கு

சிப்காட்டில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய 204 பேர் மீது வழக்கு

Update: 2021-06-19 13:31 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம் பிரகாஷ் மீனா உத்தரவின் பேரில், நேற்று சிப்காட் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிதம்பரம் மற்றும் போலீசார்  சீக்கராஜபுரம் சோதனை சாவடி, பள்ளேரி, மற்றும் சிப்காட் பஸ் நிலையம் ஆகிய 3 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது தலைக்கவசம் அணியாமல் வந்தது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது, வாகனங்களை இன்சூரன்சு செய்யாதது என்பது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறிய 204 மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வந்தவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் முக கவசம் அணியாமல் வந்த 13 பேருக்கு தலா ரூ. 200 அபராதமும், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருந்த கடை ஒன்றுக்கு ரூ.500 அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்