காணாமல் போன நர்சிங் மாணவி கல்குவாரியில் பிணமாக மீட்பு

காணாமல் போன நர்சிங் மாணவி ரத்தினகிரி அருகே உள்ள கல்குவாரியில் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-06-19 13:22 GMT
ஆற்காடு

நர்சிங் மாணவி

ராணிப்பேட்டை மாவட்டம் ரத்தினகிரியை அடுத்த அரப்பாக்கம் கல்குவாரியில் தேங்கியுள்ள மழைநீரில் இளம்பெண் பிணமாக மிதப்பதாக அப்பகுதி மக்கள் ரத்தனகிரி போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் பிணத்தை மீட்டு விசாரணை செய்தனர். 

விசாரணையில் அவர் வேலூர் மாவட்டம் பிள்ளையார் குப்பம் பகுதியை சேர்ந்த வினோத்குமார் என்பவரின் மகள் வினோதினி (வயது 19) என்பதும், கொணவட்டம் பகுதியிலுள்ள ஒரு நர்சிங் கல்லூரியில் படித்து வந்ததும் தெரிய வந்தது. மேலும் நேற்று முன்தினம் வீட்டில் ஆன்லைன் வகுப்பு கவனிக்கவில்லை என்று பெற்றோர் கண்டித்துள்ளனர் இதனால் வீட்டில் சண்டை போட்டுவிட்டு வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என வினோத்குமார் சத்துவாச்சாரி போலீசில் புகார் செய்துள்ளார்.
 
போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து சத்துவாச்சாரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று வினோதினியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்