நாகை நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் - மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கி வைத்தார்
நாகை நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை மாவட்ட முதன்னம நீதிபதி தொடங்கி வைத்தார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்ட நீதிமன்றத்தில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி கிங்ஸ்லி கிறிஸ்டோபர் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைமை நீதிபதி ரஜினி, குற்றவியல் நீதிபதி கார்த்திகா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் மாவட்ட முதன்மை நீதிபதி பேசுகையில், கொரோனா நோய் தொற்று பரவும் இக்கட்டான சூழ்நிலையில் முன் களப் பணியாளர்களுக்கு இணையாக பணியாற்றி வரும், வக்கீல்கள், நீதிதுறை பணியாளர்கள் அனைவரும் அவசியம் கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்றார். இதில் சார்பு நீதிபதி ஜெகதீசன், சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் சுரேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல கீழ்வேளூர் ஒன்றியம் இலுப்பூர் ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் கொரோன தடுப்பூசி முகாம் நடைபெற்றது.முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கலாவதி நடராஜன் தொடங்கி வைத்தார். முகாமில் தேவூர் அரசு மருத்துவமனை டாக்டர்கள் அகிலன், ரோகினி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு் 223 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் தாசில்தார் மாரிமுத்து, துணை வட்டார வளர்ச்சி அலுவலர். இந்திரா, ஊராட்சி செயலர் செல்வேந்திரன், ஊராட்சி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
எரவாஞ்சேரி ஊராட்சி மேல ஓதியத்தூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது முகாமை ஊராட்சி மன்ற தலைவர் கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார். இதில் தேவூர் அரசு மருத்துவமனை டாக்டர் சந்திரமவுலி மற்றும் மருத்துவ குழுவினர்கள் கலந்து கொண்டு 181 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. இதில் ஊராட்சி துணை தலைவர் காவியா இளையராஜா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்.பக்கிரிசாமி ஊராட்சி செயலர் கேசவன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.