பரமத்திவேலூரில் பூக்கள் விலை சரிவு; விவசாயிகள் கவலை

பரமத்திவேலூரில் பூக்கள் விலை சரிவு; விவசாயிகள் கவலை

Update: 2021-06-18 23:00 GMT
பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிரிடப்பட்டுள்ளது. இங்கு விளையும் பூக்களை விவசாயிகள் பரமத்திவேலூரில் உள்ள தினசரி பூக்கள் ஏல சந்தைகளுக்கு கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர். 
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.250-க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.200-க்கும், முல்லைப் பூ ரூ.250- க்கும், செவ்வந்திப்பூ ரூ.250-க்கும் ஏலம் போனது. 
இந்தநிலையில் நேற்று‌ நடைபெற்ற ஏல‌த்தில் குண்டுமல்லி கிலோ ரூ.180-க்கும், சம்பங்கி கிலோ ரூ.50-க்கும், அரளி கிலோ ரூ.100-க்கும், ரோஜா கிலோ ரூ.150-க்கும், முல்லைப்பூ ரூ.180-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் ஏலம் போனது. 
திருமண முகூர்த்தங்கள் மற்றும் விஷேச நிகழ்ச்சிகள் இல்லாததால் பூக்கள் விலை சரிவடைந்துள்ளது. இதனால் பூக்கள் பயிர் செய்துள்ள விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
=======

மேலும் செய்திகள்