செங்கம் அருகே போலி பெயிண்டு தயாரித்தவர் கைது

செங்கம் அருகே போலி பெயிண்டு தயாரித்தவர் கைது

Update: 2021-06-18 18:26 GMT
செங்கம்

செங்கம் அருகே கண்ணக்குருக்கை கிராமத்தில் பிரபல பெயிண்டு நிறுவனம் பெயரில் போலியாக பெயிண்டு தயாரிப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து பாய்ச்சல் போலீசார் கண்ணக்குருக்கை பகுதியில் சோதனை நடத்தினர். அப்போது அன்புதுரை (வயது 30) என்பவர் போலியாக பெயிண்டு தயாரித்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அவரது வீட்டில் இருந்த பெயிண்டு தயாரிக்கும் 2 எந்திரங்கள், 282 லிட்டர் பெயிண்டு மற்றும் ரூ.88 ஆயிரம், கணினி உள்ளிட்டவைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். 

மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்புதுரையை  கைது செய்தனர்.

மேலும் செய்திகள்