புதுப்பேட்டை அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது

புதுப்பேட்டை அருகே வீடு புகுந்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனா்.

Update: 2021-06-18 17:16 GMT
புதுப்பேட்டை, 

புதுப்பேட்டை அருகே உள்ள வரிஞ்சிபாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் மகன் சசிகுமார் (வயது 34). விவசாயி. இவரது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள பித்தளை பொருட்களை யாரோ மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டனர். இதுகுறித்து சசிகுமார் புதுப்பேட்டை போலீசில்  புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் திருத்துறையூரை சேர்ந்த சிவக்குமார் மகன் பிரித்திவிராஜ் (19), சுப்பிரமணி மகன் மணிமாறன் (25) என்பது தெரியவந்தது. 

 இதையடுத்து போலீசார், இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்