உடுமலை பெரியார் நகரில் ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் உள்ள சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
உடுமலை பெரியார் நகரில் ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் உள்ள சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
உடுமலை
உடுமலை பெரியார் நகரில் ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் உள்ள சுரங்கப்பாதையில் கழிவுநீர் தேங்காதவாறு பணிகளை மேற்கொள்ள அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
தேங்கி நிற்கும் கழிவுநீர்
உடுமலை பெரியார் நகரில் ரெயில்வே தண்டவாளத்திற்கு கீழ் சுரங்கப்பாதை உள்ளது. இதன் தெற்கு பகுதியில் உள்ள பழனியாண்டவர் நகர், முனீர்நகர், ஜீவாநகர், தாண்டாகவுண்டர் தோட்டம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் இந்த சுரங்கப்பாதை வழியாக பழனிசாலை மற்றும் மத்திய பஸ்நிலையம் உள்ளிட்ட நகரின் வடக்கு பகுதியில் உள்ள இடங்களுக்கு வந்துசெல்கின்றனர். இந்த சுரங்கப்பாதையில் மழைகாலத்தில் மட்டுமல்லாது, அந்த பகுதியில் தண்ணீர் ஊறுவதால் அடிக்கடி தண்ணீர், கழிவுநீர் தேங்கி நிற்கிறது.
அங்கு தேங்கும் தண்ணீர் ஒரு மூலையில் அமைக்கப்பட்டுள்ள தாழ்வான பகுதிக்கு செல்லும் வகையில் அங்கு குழி அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஆனால் அடிக்கடி தண்ணீர் ஊறி தேங்கி நிற்கிறது. அதனால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.
இந்த நிலையில் அந்த சுரங்கப்பாதையில் மண் நிறைந்து சேறும், சகதியுமானது. அதனால் கடந்த சில மாதங்களாக அந்த சுரங்கப்பாதை வழியாக நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
அதனால் அங்குள்ள சேறு சகதிகளை அகற்றி, பொதுமக்கள் நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் சென்று வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உடுமலை நகராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து உடுமலை நகராட்சி ஆணையாளர் தே.கிருஷ்ணமூர்த்தி, உதவி பொறியாளர் மாலா, சுகாதார ஆய்வாளர் ஆர்.செல்வம் ஆகியோர் அந்த சுரங்கப்பாதையை ஆய்வு செய்தனர்.
அப்போது தி.மு.க. நகர செயலாளர் எம்.மத்தீன் உடனிருந்தார். இதைத்தொடர்ந்து இந்த சுரங்கப்பாதையில் தேங்கியிருந்த சேற்றை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டன. அத்துடன் இந்த சுரங்கப்பாதையில் அடிக்கடி தண்ணீர் தேங்கி நிற்கும் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில், தண்ணீர் தேங்காத வகையில் எவ்வாறு பணிகளை மேற்கொள்வது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.