தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது

தேனியில் தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடந்தது.

Update: 2021-06-18 14:51 GMT
தேனி:
தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், தென்மேற்கு பருவமழை தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசுகையில், "பருவமழை காலத்தில் ஆற்றங்கரையோர பகுதிகளில் வெள்ளம் புகும் இடங்களை அடையாளம் கண்டு, அங்கு முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும். வெள்ளம் சூழ்ந்தால் அங்குள்ள மக்களை உடனடியாக பாதுகாப்பு முகாம்களுக்கு அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும். பேரிடர் மீட்பு குழுவினர் தயாராக இருக்க வேண்டும். பேரிடர் மீட்பு உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்" என்றார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ரமேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மணி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
போடி அருகே பத்திரகாளிபுரத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் நேற்று நடந்தது. இந்த முகாமை கலெக்டர் முரளிதரன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள காத்திருந்த மக்களிடம் சமூக இடைவெளியை தவறாமல் கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார். அதுபோல், பழனிசெட்டிபட்டி, போடி முந்தல் ஆகிய இடங்களில் நடந்த காய்ச்சல் கண்டறியும் முகாம்களையும் கலெக்டர் ஆய்வு செய்தார். 


மேலும் செய்திகள்